வலது பக்கம் கல்லீரல் சிதைவு – ஸ்ரீமதி மரணத்தில் பகீர் திருப்பம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவியில் மரணம் தொடர்பாக சிபி சிஐடி போலீசார் பள்ளியில் பதிவாகி இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் மாணவியின் முதல் மற்றும் 2 வது பரிசோதனைகளில் சில வேறுபாடுகள் இருப்பதாகவும், முதல் பிரேத பரிசோதனையை விட 2 வது பரிசோதனையில் உடலில் காயங்கள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அதே போல் இரண்டாவது பிரேத பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது முதல் மற்றும் 2வது பிரேத பரிசோதனைகளை ஒப்பிட்டு ஸ்ரீமதி தரப்பு அறிக்கை வெளியீடப்பட்டுள்ளது.

அதில் வலது பக்கம் கல்லீரல் சிதைவு ஏற்பட்டு இருப்பதாகவும், உயரத்தில் இருந்து விழுவதால் இது சிதைவு ஏற்பட சாத்தியமில்லை என ஸ்ரீமதி தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.