தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர்: அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர்களுக்கு 2 மகன் உள்ள நிலையில் ஒரு மகன் கௌதம் சிகாமணி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

குஷியோ குஷி! 15 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! வானிலை அப்டேட்..!!

மற்றொரு மகன் டாக்டர் அசோக் சிகாமணி. இவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரபு என்பவர் வாபஸ் பெற்ற காரணத்தினால் இவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

விராட் கோலி பிறந்த நாள்! கிரிக்கெட் மைதானத்தில் கலக்கல் வீடியோ!!

இதனை தொடர்ந்து கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment