Connect with us

தமிழகத்தில் இன்று அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

ரேஷன் அரிசி

தமிழகம்

தமிழகத்தில் இன்று அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி என்ற வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் நெசவுத்தொழில், நூல், பஞ்சு உள்ளிட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியானது சற்று அதிகமாக காணப்படுகிறது.

இதற்கான ஜவுளித்துறை தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் அரசு மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இன்று அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தினை அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 4000 அரிசி ஆலைகள் மற்றும் 20000 சில்லறை விற்பனை கடைகள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு கிலோ அரிசி விலை மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயரும் என்பதால் 5% ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top