நவம்பர் 30 முதல் ரேசனில் இலவசம் கிடையாது: அதிர்ச்சி அறிவிப்பு!

நவம்பர் 30-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசும் பிரதமரின் க்ரீம் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இந்த அரிசி மற்றும் கோதுமை வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருவதால் இந்த திட்டம் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

இதனால் நாடு முழுவதும் உள்ள 80 கோடி ரேஷன் கடையை பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை இன்னும் சில மாதங்கள் தொடர வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print