புத்துயிர் பெற்றது நமக்கு நாமே திட்டம்! 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!:அரசாணை வெளியீடு;

நம் தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் சமயத்திற்கு முன்பு ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளுக்கான மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதோடு நமக்கு நாமே திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த நமக்கு நாமே திட்டத்தில் கீழாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் நமக்கு நாமே திட்டம் ரூபாய் 100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டப் பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகை மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment