Connect with us

ஓ இதுதான் காரணமா? 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு!

revision exam 1

செய்திகள்

ஓ இதுதான் காரணமா? 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு!

ஓ இதுதான் காரணமா? 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் எதிர்பாரதவிதமாக மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் தமிழகத்தில் தொடர்ச்சியாக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெருவாரியான கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாதம் நடக்க இருந்த திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்று தமிழகத்தின் அண்டை மாநிலமும் யூனியன் பிரதேசமுமான புதுச்சேரியில் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் பத்து, பன்னிரண்டாம் வகுப்புக்கு நடக்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒரு கொரோனா பரவலின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top