Connect with us

நேற்று திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்- இன்று அதே கொஸ்டின் பேப்பர் விநியோகம்!

revision exam 1

தமிழகம்

நேற்று திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்- இன்று அதே கொஸ்டின் பேப்பர் விநியோகம்!

நேற்று திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்- இன்று அதே கொஸ்டின் பேப்பர் விநியோகம்!

பொதுவாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். இந்த பொதுத்தேர்வுக்கு முன்பதாக அவர்களுக்கு ஏகப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும். அவற்றுள் ஒன்றுதான் திருப்புதல் தேர்வு.

இந்த நிலையில் நம் தமிழகத்தில் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் திருப்புதல் தேர்வுக்கான கேள்வி நேற்றைய தினமே வெளியாகி உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது. இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன் குமார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்.

நேற்று வெளியான அதே வினாத்தாள் தான் இன்று திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் பத்தாம் வகுப்பு அறிவியல் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வெளியானது.

வினாத்தாள் வெளியானது குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் பொன்குமார் திருவண்ணாமலையில் விசாரணை நடத்தி கொண்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top