
பொழுதுபோக்கு
தி லெஜண்ட் சரவணன் படத்தின் திரை விமர்சனம்! படம் குறித்து மக்களின் கருத்துக்கள்!
பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.
முன்னணி ஹீரோக்களின் படங்களை போலவே இந்த படத்திற்கும் ஹீரோக்களின் சம்பளம் போக 30 கோடிக்கு மேலாக படத்தின் வேலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன, இந்த படத்தில் தி லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி ,தம்பி ராமையா மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இந்த படம் இன்று வெளியாக உள்ளது . ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்துப்பாடல்களும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ளது.யாஷிகா ஆனந்த் மற்றும் ராய் லட்சுமி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி உள்ளனர்.
இந்த படம் தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாகவும் படம் வெளியாக உள்ளது.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாக சரவணன், பல சாதனைகளை செய்துள்ளார், அதை தொடர்ந்து தனது சொந்த ஊருக்கும் பயன்படும் வகையில் சில விஷயங்களை செய்யவேண்டும் என முடிவு செய்து சொந்த ஊருக்கு திரும்புகிறார் சரவணன், அங்கு அவரது தாத்தா உருவாக்கிய கல்லூரியின் பொறுப்பை ஏற்றுவருகிறார்.
இந்நிலையில் பள்ளி பருவ நண்பரான ரோபோ ஷங்கர் அவரது குடுமபத்திரை சந்திக்கிறார் அப்போது அவர்கள் அனைவருக்கும் சக்கரை வியாதி இருப்பது தெரிய வருகிறது. சக்கரை வியாதியால் ரோபோ ஷங்கர், தீடீரென ஒரு நாள் மரணமடைய, இதனால், அதிர்ச்சியடைகிறார் சரவணன்.
தனது சொந்த ஊருக்கும் பயன்படும் விஷயத்தை செய்ய வேண்டும் என வந்த சரவணனுக்கு சக்கரை வியாதிக்கு மருந்து கண்டுவிடுக்க வேண்டும் என எண்ணம் வந்துள்ளது.இதற்கிடையில் அவருக்கு வரும் கஷடங்களை கடந்து சொந்த ஊருக்கு அவர் என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை.
தெலுங்கு திரையுலகின் வேலை நிறுத்த போராட்டம்! காரணம் தமிழ் ஹீரோக்கள் தானா?
பலம் :
முதல் படத்திலே மக்களை தனது நடிப்பில் ஈர்த்துள்ளார் சரவணன்.
நகைச்சுவையால் மக்களை கவருகிறார் மறைந்த நடிகர் விவேக்.
வில்லனாக வரும் சுமன் நடிப்பு ஓரளவு ஓகே.
படத்தில் ரோபோ ஷங்கர் கதாபாத்திரம் தனித்துவம் .
அனல் அரசின் சண்டை, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல் படத்திற்கு மேலும் பலமாக அமைந்துள்ளது.
பலகீனம் :
தேவையில்லாத இடத்தில் பாடல்கள், சலிப்பு ஏற்படுத்தும் காட்சிகள்
மற்ற நடிகர்களின் நடிப்பு பெரிதாக அமையவில்லை.
திரைக்கதை, இயக்கம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.
