Connect with us

நயன்தாராவின் o2 படத்தின் விமர்சனம்!

o2 mo 1

பொழுதுபோக்கு

நயன்தாராவின் o2 படத்தின் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நயன்தாரா, அவர் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது,வசூல் சாதனம் படத்துவருகிறது.

இப்படத்திற்கு பிறகு நயன்தாரா அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வேளையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

mayan 02

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் நேற்று வெளியாகிய படம் O2. இந்த படத்தில் நயன்தாரா, ரித்விக், பரத் நீல கண்டன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் அனைவரும் எதிர்பார்த்து இருந்த O2 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் நேற்று வெளியாகியுள்ளது .

படத்தின் கதைக்களம் கணவனை இழந்த விதவைவாகவும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். அவருடைய ஒரே மகன் ரித்விக். அவனுக்கு சுவாச கோளாறு பிரச்சனை இருக்கிறது.

ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தான் அவன் சுவாசித்து உயிர் வாழ முடியும். மேலும் ஆபரேஷன் செய்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து கொச்சிக்கு ஆம்னி பேருந்து மூலம் நயன்தாரா செல்கிறார். கடும் மழையில் நிலச்சரிவில் அந்த பேருந்து சிக்கிக் கொள்கிறது.

பேருந்தில் பயணிக்கும் சக பயணிகளாக ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு அரசியல்வாதி, காதலியுடன் ஓடிப்போக திட்டமிட்ட ஒரு காதலன் இருக்க பேருந்தில் இருப்பவர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதனால் நயன்தாராவின் மகன் ரித்விக் ஆக்சிஜன் சிலிண்டரை திருட முயற்சிக்கின்றனர்.

c35f7d8b25d647bd6be500650ec0fb9d

தன் மகனை காப்பாற்ற நயன்தாரா என்னென்ன முயற்சி மேற்கொள்கிறார்? இறுதியில் பேருந்துக்குள் இருந்தவர்களெல்லாம் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? நயன்தாரா மகனுக்கு சிகிச்சை கிடைத்ததா? என்பது தான் இந்த படத்தின் மீதி கதை.

இவர்களில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் நீலகண்டனுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்தில் போதைப் பொருளை கடத்தி கேரளாவில் செல்லும் போது சிக்கிக் கொள்கிறார். எப்படியாவது தப்பிக்க வேண்டும் என பதட்டத்தில் கொஞ்ச நேரம் ரவுடி போலீசாக மாறுகிறார்.

நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்துள்ளார் . முதல் படம் என சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்ற தேசிய பேரிடர் குழு போராடுவது மாதிரி கதை அமைத்துள்ளது.

பேருந்து சிக்கிய குடும்பத்தினர் உறவினர்களில் ஒரு சில பேரை மட்டும் தான் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். படத்தில் பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான காட்சிகள் இல்லை.

பேருந்து உள்ளே நடக்கும் காட்சிகளை தான் அதிகமாக படமாக்கப்பட்டுள்ளதால் படத்தின் சுவாரசியம் குறைவாக இருக்கிறது. 2 மணிநேரம் ஜவ்வாக படம் நீட்டிக்கப்பட்டுள்ளது .

ஒரே ஒரு பேருந்தை மட்டும் மையமாக வைத்த கதை என்பதால் பரபரப்பு இல்லாமல் கூட இருக்கலாம் . முதல் படத்திலேயே முன்னணி நடிகை நயன்தாராவை வைத்து படம் இயக்கி இருந்தாலும் அதற்கான முக்கியத்துவத்தை இழந்து விட்டார் இயக்குனர். தாய்மையின் போராட்டத்தை இந்த கதையில் கூறியுள்ளார்.

o2 movie review6 1655432093
நிறைகள் :

நயன்தாரா தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரித்விக் நடிப்பு செம சூப்பர்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

தன்னை விட அஜித் தான் அழகான ஹீரோ – உண்மையை உடைத்த விஜய்! இது எப்போ நடந்தது?

குறைகள் :

பேருந்து உள்ளே நடக்கும் காட்சிகளை அதிகமாகவும், மீட்புப்பணி குழுவின் காட்சிகளை குறைவாகவும் காண்பித்திருப்பது சலிப்படைய வைத்திருக்கிறது.

கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

O2- லெவல் குறைவாக தான் இருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top