Connect with us

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்!!: கூட்டணி கட்சி தலைவர் கோரிக்கை;

electric meter

தமிழகம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்!!: கூட்டணி கட்சி தலைவர் கோரிக்கை;

தமிழகத்தில் கடந்த மாதம் திடீரென்று சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் மின் கட்டணம் உயர்வு தமிழகத்தில் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் என்று மின்வாரிய நலத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இது 8 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழகத்தில் விலை உயர்த்தப்படுவதாக கூறினார். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மின்மாற்றி மட்டுமே வைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதன் வரிசையில் ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனத்தினை தெரிவித்துள்ளனர். அதன்படி ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்கள் வரலாறு குறித்து பிரதமருக்கு காட்டியது மிகவும் பாராட்டக் கூடியது என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top