
தமிழகம்
போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் கொடூர கொலை..!!
சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்தில் கைதான பேருந்து ஓட்டுநரை குடும்பத்தினர் வெட்டி சாய்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பேருந்து ஓட்டுனர் முருகர் என்பவர் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். வீட்டில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிறுமியின் புகாரின் பேரில் முருகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 27ஆம் தேதி முருகனை அவரது மனைவி ஜாமினில் வெளிய எடுத்து வந்தார் முருகன்.
நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த தகவல் அறிந்ததும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரது வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். தங்கள் வீட்டு பெண் மீது கை வைத்ததற்காக தக்க பதிலடி கொடுப்போம் என்று வீட்டுக்கு வந்து மிரட்டி சென்றதாகவும் தகவல் கிடைத்தது.
சம்பவத்தன்று காலையில் தைலமற காட்டிற்கு சென்ற முருகனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது உயிருக்கு போராடிய முருகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிர்விழந்தார்.
முருகனின் மனைவி புகார் அளித்த நிலையில் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தணிகைமலை அவரது இரு மகன்களை கைது செய்தனர். மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கும் நிலையில் முருகன் காதலிப்பதாக கூறிய தங்கள் வீட்டின் பெண்ணின் மானத்தை கெடுத்ததாக ஆதங்கத்தில் கொலை செய்ததாக கூறினர்.
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி சிறுமி என்று பாராமல் அவளது வாழ்க்கையையும் சீரழித்ததால் பழிக்கு பலி வாங்கும் நோக்கில் காத்திருந்ததாகவும் தகவல் கிடைத்தது.
கைதாகி சிறைக்கு சென்றவன் சில மாதங்களில் ஜாமினில் வெளியே வந்த சுதந்திரமாக சுற்றியதால் ஆத்திரமடைந்ததாகவும் கூறினார். இந்த கொலை சம்பவத்தை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
