சண்டைக்கு சண்டை… ரத்தத்துக்கு ரத்தம்… பழிக்குப்பழி வாங்கிய குரங்குகள்…. பீதியில் மக்கள்…..

மனிதர்கள் குரங்கில் இருந்து தான் வந்தார்கள் என்று கூறுவார்கள். அதனால் தானோ என்னவோ உருவம் மட்டுமல்லாமல் குணமும் மனிதர்களை போலவே குரங்குகளுக்கு உள்ளது. ஆம் மனிதர்கள் தான் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டால் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது குரங்குகளும் பழிவாங்கும் செயலில் ஈடுபட தொடங்கி விட்டன.

 

குரங்கு

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு நாக்பூர் அருகே உள்ள லாவூல் கிராமப்பகுதியில் சில நாய்கள் குரங்கு குட்டி ஒன்றை கடித்து தெருவில் இழுத்து சென்றுள்ளன. இதனை கண்ட குரங்குகள் அதிர்ச்சி அடைந்ததோடு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளன.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் எங்கு நாய்க்குட்டிகளை பார்த்தாலும் அவற்றை தூக்கி சென்று மரத்தின் மீது இருந்து அல்லது மாடி மீது இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்ய தொடங்கியுள்ளன. ஒரே ஒரு குரங்கு குட்டியை நாய்கள் கொன்றதற்காக தற்போது வரை சுமார் 250 க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்று குவித்துள்ளதாம்.

இதனால் அந்த கிராமப்பகுதியில் தினமும் குரங்குகள் மற்றும் நாய்களுக்கு இடையே போர் நடந்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வெறிப்பிடித்த குரங்குகளால் அவர்கள் அச்சத்தில் இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த கிராம மக்கள் அவர்கள் உதவியோடு குரங்குகளை பிடித்தனர்.

இதனையடுத்து பிடிபட்ட குரங்குகள் நாக்பூர் அருகே வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மனிதர்களை போலவே தேடி தேடி போய் குரங்குகள் பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment