காவல்துறைக்கு பாராட்டு: பிடிக்கப்பட்ட 80 கிலோ தங்கம் மீண்டும் ஒப்படைப்பு!!

இந்திய அளவில் கடத்தல் தொழில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் வாகன பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக தேர்தல் நேரங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வாகன பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வரும்.

இந்த சூழலில் இன்று சென்னையில் 80 கிலோ தங்கம் வாகன சோதனையில் பிடிக்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் போலீசார் வாகன சோதனையில் பிடித்த 80 கிலோ தங்கத்தை மீண்டும் ஒப்படைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தங்கம் கொண்டு வரப்பட்டதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் காவல்துறையினர் முறையாக விசாரணை செய்து தங்கத்தை ஒப்படைத்தனர்.

கொரியர் மூலம் மும்பையில் இருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட தங்கம் சவுகார்பேட்டை நகை கடைக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் உள்ள 30 நகைக் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக தங்கம் கொண்டுவரப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் கிடைத்தது. ஆவணங்களை சமர்ப்பித்தால் பிடிக்கப்பட்ட 80 கிலோ தங்கம் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறையினரின் இத்தகைய செயல் ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவுவதோடு மட்டுமல்லாமல் பலர் தரப்பிலிருந்து பாராட்டுக்களும் வந்த வண்ணமாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment