மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறதா?

கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முககவசம் அணிதல், தனி மனித இடைவேளை போன்ற விசயங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அரசு கொரொனா குறித்து தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் லாக் டவுன் போடப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுவரை லாக் டவுன் என முறைப்படி தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஆனால் லாக் டவுன் வந்து விட்டது என பலர் தவறாக வதந்தி பேசி வருகின்றனர். வட மாநிலங்களில் பல மாநிலங்களில் இரவு நேர லாக் டவுன்கள் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவி வருவதால் இங்கும் லாக் டவுன் போடப்படுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. மேலும் கொரோனா குறித்த முக்கிய கட்டுப்பாடுகள் கொண்ட அரசின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment