பின்வாங்கிய ஆர்ஆர்ஆர்….. வலிமையுடன் மோதும் விஷால்…. வாகை சூடுவாரா?

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிகமான படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக பண்டிகைகளில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த தீபாவளிக்கு கூட ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஷாலின் எனிமி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது.

எனிமி

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கும் அதே நிலை தான் தொடர்கிறது. முன்னதாக பொங்கலுக்கு பாகுபலி பட இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஆர்ஆர்ஆர் படம் பின்வாங்கி விட்டது.

வலிமை

இதனை தொடர்ந்து பொங்கல் ரேசில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படமும், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படமும் இருந்தன். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் பின்வாங்கியதால் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை பொங்கலுக்கு வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார்.

முன்னதாக இப்படத்தை ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது ஆர்ஆர்ஆர் படம் பின்வாங்கியதால் அவற்றுக்கான தியேட்டர்களில் பாதி, வலிமைக்கு சென்றாலும் மீதியுள்ள தியேட்டர்கள் கிடைத்தாலே போதும் என்பதால் விஷால் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வெளியாவதால் பலர் போட்டியிட தயங்கி பின்வாங்கி விட்டனர். இந்நிலையில் விஷால் தைரியமாக மோத முடிவு செய்துள்ளார். இதேபோல் தான் கடந்த தீபாவளிக்கு ரஜினியுடன் மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமையை வென்று விஷால் வீரமே வாகை சூடுகிறாரா என்பதை பார்க்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment