அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு: சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பொறுத்தவரையில் இந்திய அணிக்காகவும், உ.பி.அணிக்காகவும் பங்கேற்று போட்டிகளில் கலந்துகொண்ட ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

இவரை ரசிகர்கள் அனைவரும் ’சின்ன தல’என்று கூறி அன்போடு அழைப்பார்கள். இந்நிலையில் திடீரென தனது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு

இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஓய்வு பெற்ற தினத்தில், தனது ஓய்வு தினத்தையும் ரெய்னா அறிவித்திருந்தார்.

மேலும், தன்னுடைய ரசிகர்கள் அனைவரும், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவு கொடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment