பாம் வைக்கவும் தயங்க மாட்டோம்; திமுகவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர்!

எங்களுக்கும் பாம் வைக்க தெரியும் திமுக வுக்கு பகிரங்க மிரட்டல் விடுப்பதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்ணல் பாண்டியன் பா.ஜ.க உண்ணாவிரத போராட்டத்தில் பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ராணுவ வீரர் பிரபு படுகொலையை கண்டித்தும், பா.ஜ.க பட்டியலணி மாநில தலைவர் தடா பெரியசாமி இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிம்சனில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது, இதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர்களான கருணாநாகராஜன், வி பி துரைசாமி உள்ளிட்ட பா ஜ க நிர்வாகிகள், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பிரபுவை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்துள்ளார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் எனவே நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று செய்திருக்கிறார்.

திமுக தைரியத்தால்தான் ராணுவ வீரரை கொலை செய்து இருக்கிறார்கள். திமுக கொள்ளை அடிப்பதிலும் கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். இராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள் எனவும் பாம் வைக்க தெரிந்தவர்கள் எனவும், இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுக வுக்கு எதிராக பாம் வைப்போம் எனவும் இதை பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது முறையானதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு செய்தியாளர்களை திமுக கை கூலிகள் என கடுமையாக விமர்சித்தார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிகழ்சியில் நண்பகல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார், மாலை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று போர் நினைவு சின்னதில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டு உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.