Connect with us

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கண்டனம்!! மீண்டும் தாக்கினால் கண்டிப்பாக பதிலடி!!

taliban4447802 1629089821

செய்திகள்

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கண்டனம்!! மீண்டும் தாக்கினால் கண்டிப்பாக பதிலடி!!

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கண்டனம்!! மீண்டும் தாக்கினால் கண்டிப்பாக பதிலடி!!

தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய புதிய உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையில் கழுத்துப் பட்டையை அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளனர்.

அதோடு ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அனைத்து விதமான சட்டங்களும் கொண்டுவரப்பட்டு வருகிறது.

இந்த தாலிபன் அரசின் மீது கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் அச்சுறுத்தலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தாலிபான்கள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் அச்சுறுத்தலான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர். போர் தொடங்கினால் அது எந்தத் தரப்புக்கும் சாதகமாக இருக்காது என்பதை பாகிஸ்தான் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தாலிபன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top