
செய்திகள்
பொருளாதார தடைக்கு பதிலடி ; ரஷ்யா அதிரடி !!
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் ரஷ்ய படைகளால் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரூபிளில் கட்டணம் செலுத்தாததால் ரஷ்யா இயற்கை எரிவாயு வினியோகத்தை நிறுத்தியதாக போலந்து, பல்கேரியா நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ரஷ்ய நாட்டின் மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில் இயற்கை எரிவாயு வினியோகத்தை போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு மட்டும் வழங்கப்படும் என அதிபர் புதின் தெரிவித்தார்.
தற்போது ரூபிளில் கட்டணம் செலுத்த மறுத்ததால் இயற்கை எரிவாயு வினியோகத்தை நிறுத்தி வைத்ததாக போலந்து, பல்கேரியா நாடுகள் குற்றம்சாட்டியுள்ளனர். ரஷ்யாவின் அறிவிப்புக்கு பிறகு முதல்முறையாக போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு எரிவாயு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
