இன்று முதல்! சில்லறை பண பரிவர்த்தனை.. 4 நகரங்களில் அறிமுகம்!!

சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை புழக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவி பிரியா மரணம்: டிச.6-ம் தேதி மருத்துவர்களிடம் விசாரணை!!

இந்நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் பைசா வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல் சில்லறை பண பரிவர்த்தனையை e₹-R என்ற குறியீட்டால் குறிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனை அறிமுகப்படுத்தும் வகையில் மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வரில் ஆகிய நகரங்களில் தொடங்க இருப்பதாகவும், வரும் காலங்களில் 9 நகரங்களில் விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.