Connect with us

கோவையில் மீண்டும் கட்டுப்பாடுகள்: ஞாயிறு கடை திறக்க தடை!

Tamil Nadu

கோவையில் மீண்டும் கட்டுப்பாடுகள்: ஞாயிறு கடை திறக்க தடை!

28044a1ad3ffc4ac61e66e03294bc0c7

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
சென்னையில் உள்ள கோவில்களில் ஆடிக்கிருத்திகை கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை அடுத்து கோவையிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கோவையில் பால், மருந்து, காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை இயங்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவையில் உள்ள அனைத்து உணவகங்களீலும்களிலும் 8 மணி முதல் 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி என்றும் கோவையில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளிலும் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோவை மாவட்ட சோதனை சாவடிகளில் கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

9990fc3d96e23c7e337da875675c96adb1f127e41c7e542cc863b586b94cbca2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top