இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு !!
இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதனால் அந்நாட்டில் வாழும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகிறது
இந்நிலையில் எரிபொருள் வாங்க முடியாத நிலை உருவாகி இருப்பதால் இலங்கையின் முக்கிய நகரமாக கொழும்பில் நாளோன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது.
இந்த சூழலில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான பெட்ரோலியம் கழகம் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.
அதன்படி, இருசக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு ஒரு முறை வரும் பொழுது 1000 ரூபாய் வரையில் எரிபொருள் வாங்கலாம். ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள் ரூ.1500 வரையிலும் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ரூ. 5000 ரூபாய் வரையில் வாங்கலாம்.
இதனை தொடர்ந்து பஸ், லாரி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் வாங்க 50 கோடி டாலர் கடன்கேட்டு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தயிருப்பது குறிப்பிடத்தக்கது.
