Connect with us

பேரூராட்சிகளில் கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!!

Minister Chakrapani

தமிழகம்

பேரூராட்சிகளில் கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!!

தமிழகத்திற்கு திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டிற்கு மேல் ஆகிய நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பயணம், நகைக்கடன் தள்ளுபடி போன்ற தேர்தல் வாக்குறுதி கொடுத்த நிலையில் அதனை நிறைவேற்றி காட்டியது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என அறிவித்தது. அந்த வகையில் தற்போது பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்காக உணவுத்துறை மானியத்தில் சுமார் ரூ.2,000 கோடி அளிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் கூறினார்.

மேலும், ஏற்கனவே தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் மூலம் ஏழை மக்கள் பயன் பெற்று வரும் சூழலில் தற்போது இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top