தேமுதிகவின் அதிரடி அறிவிப்பு: பொங்கலுக்கு 3000 ரூபாய் ரொக்கத் தொகை வழங்க தீர்மானம்!!

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். தமிழகத்தில் திமுகவின் ஆட்சி வந்தது பின்னர் அடுத்தடுத்து பல அறிவிப்புகளை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்ட வருகின்றன.

பரிசு தொகுப்பு

இது பல தரப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு பொங்கல்பரிசு பட்டியல் வெளியிடப்பட்டது. அது பலருக்கும் ஏமாற்றத்தை வழங்கியதாக காணப்பட்டது. ஏனென்றால் இந்த ஆண்டு பொங்கலுக்கு, பொங்கல் பரிசு தொகை வழங்கப்படாது என்ற செய்தியை பலருக்கும் சோகத்தை உருவாக்கியது.

அதன்படி தை திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று தமிழக குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை வாழ் மக்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வண்ணமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தாங்கள் ஆட்சியில் இருந்தபோது முழு கரும்புடன் 2,500 ரூபாய் ரொக்கப் பணமாக வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி கூறியிருந்தார்.

இது குறித்து இன்றைய தினம் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment