Connect with us

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் !! மௌனம் காக்கும் இந்தியா..

Capture 174

செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் !! மௌனம் காக்கும் இந்தியா..

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் !! மௌனம் காக்கும் இந்தியா..

உக்ரைனில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட புகாரையடுத்து ஐ.நா-வில் மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகரமான தீவை சுற்றி இருக்கும் பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற்ற போது அங்கு உள்ள பொதுமக்களை  ரஷ்ய வீரர்கள் சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

புச்சா  நகரில் இந்த படுகொலை நடைபெற்றதாக கூறப்பட்டு அது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகின. கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்யாவை ஐநா மனித உரிமை ஆணைய கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதற்கு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. புச்சா நகரின் படுகொலை குறித்து அண்மையில் விசாரிக்க வேண்டும் என கூறிய இந்தியா இந்த வாக்கெடுப்பில் இருந்து தற்போது நடுநிலையில் உள்ளது.

இந்நிலையில் 93 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில்  தீர்மானம் வெற்றி பெற்று ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top