Connect with us

டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் முறை தலைவியான ரேஷ்மா!

Entertainment

டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் முறை தலைவியான ரேஷ்மா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, 4 வாரங்களை சிறப்பாக முடித்த நிலையில், 5 வாரத்திற்குள் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளனர் போட்டியாளர்கள்.

மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், ஃபாத்திமா பாபு முதலில் வெளியேற்றப்பட்டார். 2ஆவதாக வனிதா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் சாக்‌ஷி கேப்டனாக இருந்தார். 

569cda74932d26fc7eb991de56db39b7-1

ஒரு வாரம் முடிந்த நிலையில், அடுத்த வாரத்திற்கான கேப்டனுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது, கேப்டன்சி டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே இந்த வாரத்திற்கான புதிய கேப்டன். இதில், 3 அணிகளாக பிரிந்து கொண்டு கிளாஸில் பிரமீடு அமைக்க வேண்டும். மற்ற அணிகள் அதனை தடுக்க வேண்டும்.

இதில், யார் அதிக கிளாஸ் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அவர்களே இந்த வாரத்திற்கான கேப்டன். அந்த வகையில், சரவணன், தர்ஷன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் தலைவருக்கு போட்டியிட்ட நிலையில், ரேஷ்மா தான் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார்.  இதன் மூலம் முதல் முறையாக தனது தலைவர் பதவியை ஏற்கிறார் ரேஷ்மா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top