Entertainment
பிக் பாஸ் வீட்டில் பொருட்களைத் திருடும் ரேஷ்மா!!!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிக்கப்படுவதாகவும், கீரிப்பட்டி தலைவியாக மதுமிதா இருப்பார் என்றும், பாம்புப்பட்டியின் நாட்டமையாக சேரன் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதை தவிர மற்ற போட்டியாளர்களுக்கும் பல்வேறு கதாபாத்திரங்களை வழங்கினார் பிக்பாஸ். இதில் மீரா மிதூன், ஷெரீன், தர்ஷன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமானவை. தர்ஷனின் அம்மாவானார் மீரா, அவருடைய மனைவியாக நியமிக்கப்பட்டார் ஷெரீன்.

டாஸ்க் தொடங்கியபின் அனைத்து போட்டியாளர்களும் தங்களது கதாபாத்திரங்களாக மாறினர்.
தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் படி ரேஷ்மா போட்டியாளர்களின் பொருட்களை ஒளித்து வைத்துக் கொண்டே இருந்தார். திருடுபோன பொருட்களை நிகழ்ச்சியின் முடிவில் மதுமிதா கண்டுபிடித்துவிட்டார். ஆனால் யார் திருடினார் என்று கண்டுபிடிக்கவில்லை.
இறுதியில் டாஸ்க் நிறைவுக்கு வந்தது. போட்டியாளர்கள் தங்களுடைய பழைய நிலைக்கு திரும்பினர். எனினும், வரும் நாட்களிலும் இதே டாஸ்க் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவில், லக்ஸுரி பட்ஜெட்டை வழங்குவார் பிக்பாஸ். ரேஷ்மா திருடிய விதம் சிறப்பாக இருந்தது என்று பார்வையாளர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
