கோதுமைக்கான ஆதார விலை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 110 ரூபாய் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு ராபி பயிர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

ஆசிட் கலந்த குளிர்பானத்தில் மாணவன் பலி – பள்ளி குறித்து வெளியான பகீர் தகவல்..!!

இதனிடையே கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையினை குவிண்டாலுக்கு110 ரூபாய் என உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றின் மூலம் வழக்கத்தை விட கோதுமை குவிண்டாலுக்கு 2,125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பார்லியின் விலை 100 ரூபாயும், கடுகு விலை 400 ரூபாயும், கடலை விலை 105 ரூபாய் என மத்திய அரசு அதிகரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment