இடஒதுக்கீட்டு மனு- உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை!!

இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக்கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்கர் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த பொதுநல மனு மீதான விசாரணை அமர்வு இன்று வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டுமா? இது எந்த மாதரியான பொதுநல மனு என கேள்வியெழுப்பினர். அப்போது  இடஒதுக்கீடு முறை சமத்துவத்திற்கு எதிராக இருப்பது மட்டுமல்லாமல் ஜாதிய முறையை விட்டுச்செல்கிறது என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

எலி பேஸ்ட் உற்பத்தி, விற்பனைக்கு தடை – மா.சுப்பிரமணியன்!!

அப்போது பேசிய நீதிபதிகள் பொதுநல மனுவை திரும்ப பெற விட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். அதோடு விளம்பரம் நோக்கில் சட்டக்கல்லூரி மாணவி இதுபோன்ற  பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

அப்போது மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவை திரும்ப பெற அனுமதி அளிக்குமாறு கேட்டார். அப்போது அனுமதி அளித்த நீதிமன்றம் இடஒதுக்கீடு மனுவை திரும்ப பெற்று மனுவை தள்ளுபடி செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.