பதவி உயர்வில் இட ஒதுக்கீடு-நீதிமன்றம் தலையிட முடியாது! மாநில அரசுக்கே அதிகாரம்!!
தற்போது உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்குரிய அதிகாரத்தினை ஒவ்வொரு நாளும் அறிவித்துக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதன்படி அரசு பணி பதவி உயர்வில் பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு தருவது பற்றி மாநில அரசுகளை முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பதவி உயர்வு பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு தரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஒவ்வொரு பகுதியிலும் பட்டியல் இனத்தவருக்கு உள்ள பிரதிநிதித்துவம் பற்றிய தகவல்களை மாநில அரசுகள் திரட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளது. தகவல்கள் அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல் இனத்தவருக்கு உரிய ஒதுக்கீட்டை மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
பட்டியல் இனத்தவருக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அமர்வு ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
