வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

84458bf0ff8a19f87fefd9b36df15265

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த நிலையில் தற்போது தமிழக அரசு இதுகுறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

 அரசுப்‌ பணி நியமனங்களிலும்‌, கல்வி வாய்ப்புகளிலும்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள்‌ மற்றும்‌ சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ இதர
மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டம்‌ 8/2021 இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்‌ அடிப்படையில்‌, அரசுப்‌ பணி நியமனங்களில்‌ பின்பற்றப்பட்டு வரும்‌ இன சுழற்சி முறையை திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன்‌ விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சட்டமன்ற பேரவையில்‌ உறுதி அளித்திருந்தார்‌.

அதன்படி, சட்ட வல்லுநர்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர் தேர்வாணையத்துடன்‌ கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்த சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல்‌ செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌. மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல்‌ தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச்‌ சேர்க்கைகளும்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின்‌ அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்‌.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment