போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: மீள்கிறது சென்னை!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சுமார் 2 ஆயிரம் பேர்களுக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அம்மா உணவகங்களில் இருந்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெள்ளநீர் உள்ள பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையிலுள்ள மொத்தமுள்ள 24 சுரங்க பாதைகளில் 18 சுரங்கப்பாதைகள் தற்போது போக்குவரத்திற்கு தயாராகி விட்டதாகவும் இன்னும் இரண்டு சுரங்க பாதைகளில் இன்று மாலைக்குள் போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உள்ள இரண்டு சுரங்கப் பாதைகளில் நாளைக்குள் மழை தண்ணீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சென்னையில் போர்க்கால நடவடிக்கை களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதன் காரணமாக சென்னை மீண்டும் வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment