தலைநகர் சென்னையில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் அப்போது விலங்குகள், பறவைகள் திருடப்படுகிறது. காட்டுக்கோழி உள்ளிட்ட அரியவகை பறவைகள் சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டது. பின்பு 5 நாட்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை அணில் குரங்குகள் இரண்டு திருடப்பட்டது.
அங்குள்ள அணில் குரங்குகளின் கூண்டு கம்பியை உடைத்து குரங்குகள் திருடப்பட்டது. இந்த நிலையில் பூங்காவில் திருடப்பட்ட இரண்டு குரங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வண்டலூர் உயிரியல் பூங்காவில் திருடப்பட்ட ஒரு ஜோடி அரிய வகை அணில் குரங்கு மீட்கப்பட்டு அது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவின் ஒப்பந்த ஊழியரான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சத்தியவேல் அவரது நண்பர் ஜான் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 அணில் குரங்கு ரூபாய் 4 லட்சத்துக்கு விலைக்கு வாங்கிய வினோத், அவரிடம் விற்பனை செய்த சூர்யாவும் கைதாகியுள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதி வண்டலூர் பூங்காவில் பார்வையாளர் போல வந்த ஜான், ஒப்பந்த ஊழியர் உதவியுடன் அணில் குரங்குகளை கடத்தியுள்ளார்.
வண்டலூர் பூங்காவில் இருந்த ஜான், ஊழியர்கள் சென்றவுடன் அணில் குரங்கு கதை திருடி சுவர் ஏறி தப்பினார். விசாரணையில் ஒப்பந்த ஊழியர் சத்தியவேல் அவரது நண்பர் ஜான் உதவியுடன் இரண்டு அணில் குரங்கு கடத்தியது தெரியவந்தது.