
தமிழகம்
ஹிஜாப் ஆர்ப்பாட்டம்-முன்ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!!
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிர்ச்சிகரமான உத்தரவை பிறப்பித்து இருந்தது. ஏனென்றால் அந்த உத்தரவு நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி ஹிஜாப் விவகாரத்தில் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்பதுபோல கூறியிருந்தது.
ஏனென்றால் அதற்கு முன்புவரை கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து காணப்பட்டிருந்தன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்ஜாமீன் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதன்படி விவகாரத்தில் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மதுரை, ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரின் முன்ஜாமீன் கோரிய வழக்கை ஜூன் 22-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
