உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை! படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா அதிதீவிரமாக போர்புரிந்து வந்தது. இந்நிலையில் ஓரிரு நாட்களாக தான் உக்ரேனில் பதற்றமான நிலை நிலவுவது குறைந்துள்ளது.
அதுவும் குறிப்பாக உக்ரேனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் அனைவரையும் அண்டை நாடுகளின் உதவியோடு மத்திய அரசு விமானங்கள் அனுப்பி தாயகம் அழைத்து வந்தது. தாயகம் திரும்பிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் நன்றியும் தெரிவித்தனர்.
அதுவும் குறிப்பாக தமிழக மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடன் வாங்கி சென்ற எங்களை உக்ரைன் நாட்டில் பாதிக்கப்படும் போது பத்திரமாக மீட்டது போல் தற்போது இந்தியாவில் படிப்பை தொடரவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரேனில் அதிக அளவு மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு படிக்க சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டில் உள்ள 40 க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளில் பெரும்பாலும் இந்திய மாணவர்கள் படித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
