
தமிழகம்
பொது முடுக்கத்தின் போது நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரிக்கை!!
கொரோனா பொது முடுக்கத்தின் போது பல்வேறு விதமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அவற்றுள் ஒன்றுதான் தென் மாவட்டங்களில் பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து. இவை இன்றளவும் தொடங்காமல் இருப்பதால் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
அதன்படி பொதுமக்கள் தென்மாவட்டங்களில் குறைக்கப்பட்ட நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை என்று தென்மாவட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருநெல்வேலியிலிருந்து விருதுநகர் வழியாக மயிலாடுதுறை-ஈரோடு இணைப்பு பயணிகள் ரயில் இன்றளவும் இயக்கப்படவில்லை.
ராமேஸ்வரத்திலிருந்து விருதுநகர் வழியாக கன்னியாகுமரிக்கு வாரம் மூன்று முறை இயங்கிவரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது வரை இயக்கப்பட வில்லை.
மேலும் செங்கோட்டையிலிருந்து மதுரை மார்க்கத்தில் நாள்தோறும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது இரண்டு முறை மட்டுமே இயங்குகிறதாக கூறியுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் மதுரை டு ராமேஸ்வரம் வரை செல்லும் பயணிகள் ரயில் மூன்று முறை இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
நெல்லை தொடங்கி செங்கோட்டை பயணிகள் ரயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் மூன்று முறை இயக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
கொரோனா பொது முடுக்கத்தின் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் அதே அளவில் இயக்க கோரிக்கையும் வைத்துள்ளனர்.
