ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை! வழக்கை 15ஆம் தேதி விசாரிக்கும் நீதிபதி;

சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் இன்று வரையும் அனைவரிடமும் பேசப்பட்டு வருகிறது. இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானது ஸ்டெர்லைட் ஆலை தான்.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு ஆக்சிசன் பற்றாக்குறை காரணமாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு அங்கு ஆக்சிசன் உற்பத்தி செய்யப்பட்டது. இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு இன்று வரை நீதிமன்றத்தில் தான் உள்ளது.

இந்த வழக்கு இந்த மாதம் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு மார்ச் 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, பராமரிப்பு பணிகளுக்காக அனுமதி கோரி வழக்கை விரைவாக விசாரிக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வழக்கறிஞர் அரியாமா சுதந்தரம் கோரிக்கை வைத்தார். வழக்கை மார்ச் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment