Connect with us

அரசு கல்லூரிகளுக்கு நிகராக தனியார் கல்லூரிகளின் கல்விக்கட்டணம்! மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டம்

Tamil Nadu

அரசு கல்லூரிகளுக்கு நிகராக தனியார் கல்லூரிகளின் கல்விக்கட்டணம்! மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

அரசு கல்லூரிகளுக்கு நிகராக தனியார் கல்லூரிகளின் கல்விக்கட்டணம்! மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தவிர இதர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு ஆகும் செலவை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு காணப்படும். இதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மேற்கொள்வார்கள்.

இதற்கு எதிராக பலரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதுவும் குறிப்பாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் விலை உயர்வை கண்டித்து கண்டன போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் இன்று நம் தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கவன ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏதேனும் மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top