பிறவியிலேயே இரு கைகளை இழந்த பெண்ணிற்கு ஓவியக் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்க வேண்டும் என இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் கோரிக்கை. மேலும் இருகைகள் இன்றி காலால் படம் வரைந்து குறைந்த மதிப்பெண் வாங்கியதால் இடம் கிடைக்காத மாணவியும் அரசு தவின் கலை கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை.
மயிலாடுதுறையைச் சேர்ந்த லட்சுமி என்ற மாணவி சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வில் காலால் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இம் மாணவி கும்பகோணத்தில் உள்ள அரசினர் கவின் கலை கல்லூரியில் (ஓவிய கல்லூரி) ஓவியப் பிரிவில் சேர விண்ணப்பித்திருந்தார். இதற்கான நுழைவுத் தேர்வு கடந்த இரண்டாம் தேதி நடைபெற்றது.
இந்த நுழைவுத் தேர்வு இம் மாணவி குறைவான மதிப்பெண் பெற்று நுழைவுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இம்மாணவிக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு கவின் கலை கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என கல்லூரி முதல்வர் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு மாற்றுதிறனாளி மாணவி அனுப்பினார்.
மேலும் இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள், இரு கைகள் இன்றி காலால் படம் வரையும் மாணவி லட்சுமிக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இட ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டு கல்லூரியில் சேர தமிழக அரசு வாய்ப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.