Connect with us

‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ என்ற படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

why i killed gandhi 1 1

பொழுதுபோக்கு

‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ என்ற படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ என்ற படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முதன்மையானவர் மகாத்மா காந்தி. இதனால் இவரை தேசத் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். உலகமே விடுதலைக்காக சண்டை போட்டு போராடிய நிலையில் அகிம்சை வழியில் இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார் மகாத்மா காந்தி.

இதனால்தான் இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படமே அச்சிடப்பட்டுள்ளது. இவர் உப்பு சத்யாகிரகம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற பல அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் விளைவாக இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் இவர் ஓராண்டு கூட வாழவில்லை என்பது மிகுந்த வேதனையாக காணப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் நாதுராம் கோட்சே சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நாதுராம் கோட்சேயின் வாக்கு மூலத்தை மையமாகக் கொண்டு “நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நான் ஏன் காந்தியை கொன்றேன் என்ற திரைப்படம் ஜனவரி 30-ஆம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.  “நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்று நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

நாதுராம் கோட்சே தான் செய்த படுபாதக பாவத்திற்கு நியாயம் கற்பித்ததை தலைப்பாகக் கொண்டு படம் தயாரிக்கப்பட்டுள்ளது. “நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்துக்கு ஒன்றிய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்று காதர் மொய்தீன் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top