15ஆம் தேதி விடுமுறை அளித்த கேரளா அரசு! 14ஆம் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசு கோரிக்கை!! எதனால் இந்த கோரிக்கை?

நாளைய தினம் தமிழகத்தில் கோலாகலமான பண்டிகையை நடைபெற உள்ளது. அதன்படி தமிழருக்கே உரித்தான பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

இந்த சூழலில் அவர்களுக்கு தனியார் நிறுவனங்களும் தொடர் விடுமுறை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திடீரென்று இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேரள மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கேரளாவில்  உள்ள தமிழ் மக்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் தமிழில் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஜனவரி 14 பொங்கல் பண்டிகை உள்ளுர் விடுமுறையை அறிவித்து கேரள அரசு என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கேரளாவில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி 6 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment