Connect with us

குடியரசு தின விழா: கடந்தாண்டை விட பாதி அளவுக்கும் குறைவான பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு!

republic 1580021805885

செய்திகள்

குடியரசு தின விழா: கடந்தாண்டை விட பாதி அளவுக்கும் குறைவான பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு!

குடியரசு தின விழா: கடந்தாண்டை விட பாதி அளவுக்கும் குறைவான பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு!

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் குடியரசு தின விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனாவின் பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரித்தை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் பரவல் காரணமாக டெல்லியில் குடியரசு தின விழாவை காண்போரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்று நிலையில் இந்த ஆண்டு வெறும் 5000 முதல் 8000 பேர் மட்டுமே பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

பார்வையாளரின் பட்டியல் இன்னும் தயாராகவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் வெளிநாடு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை எனவும் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top