குடியரசு தினம் மற்றும் ஒத்திகை நடக்கும் மூன்று நாட்கள்: காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்!
ஜனவரி 26ம் தேதி நம் இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு முதல் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் குடியரசு தின விழா இனி ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்த நாள் தினத்தோடு சேர்த்து கொண்டாடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனால் ராணுவ வீரர்கள், பீரங்கிகள் என அனைத்தும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்தியில் தமிழகத்தில் வாகனத்தை நிராகரித்துள்ளது ஏமாற்றமாக அமைந்தது.
இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி குடியரசு தின ஒத்திகை நடக்கும் மூன்று நாட்கள் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 26 மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் நாட்களாக ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய 3 தேதிகளில் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம்-போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 9.30 வரை வாகனம் செல்ல அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
