Connect with us

குடியரசு தின அலங்கார ஊர்தி: மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்த முடிவு!

republic day vechile function

தமிழகம்

குடியரசு தின அலங்கார ஊர்தி: மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்த முடிவு!

குடியரசு தின அலங்கார ஊர்தி: மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்த முடிவு!

ஒவ்வொரு குடியரசு தினத்தன்று அலங்கார ஊர்தி அணிவகுப்பு விழா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு பெருத்த ஏமாற்றம் கிடைத்தது. ஏனென்றால் டெல்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு நமது தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும் டெல்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியை சென்னை மெரினாவில் பயணம் செய்து தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் காட்சி படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

சமூக வலைதளம் மூலம் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு காட்சி படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரே 3 அலங்கார ஊர்திகள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மக்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top