ஓ இதுதான் காரணமோ? இந்தாண்டு முதல் முன்னதாக தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம்!!

வருடத்தின் முதல் மாதமான ஜனவரி மாதம் முழுவதும் தமிழகத்தில் விடுமுறை மாதமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படும். அதன் பின்னர் தற்போது உள்ள வாரம் முழுவதும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் பின்னர் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும். இவை இந்தியாவின் பொது விடுமுறை நாட்களில் முதன்மையான ஒன்றாகும். இதற்காக ராணுவத்தினர் மிக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருவார்கள்.

அதோடு பல விமான சாகசங்களும் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டம் சற்று முன்னதாகவே தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இனி ஜனவரி 23ஆம் தேதி முதல் குடியரசு தினம் கொண்டாட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தின கொண்டாட்டம் எப்போதும் ஜனவரி 24ஆம் தேதிக்கு தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முதல் ஜனவரி 23ஆம் தேதியே குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏனென்றால் ஜனவரி 23ஆம் தேதி ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை சேர்த்து கொண்டாடும் வகையில் ஜனவரி 23ம் தேதியிலிருந்துகுடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment