ஜூன் 22 விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரது தந்தை இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் ஆவார். 1984 ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் ‘வெற்றி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1992 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில் முதன்மை நடிகராக நடித்தார்.

1993 ஆம் ஆண்டு விஜயகாந்த் உடன் இணைந்து ‘செந்தூரப்பாண்டி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 1996 ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார். இப்படம் வெற்றிப் பெற்று விஜயின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார் விஜய். நடிகராக மட்டுமல்லாமல் தான் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடி பாடகராவும் புகழ் பெற்றவர். தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி பணியாற்றி வருகிறார் விஜய்.

விஜய் நடித்த படங்களில் முக்கியமான படங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பகவதி’ திரைப்படம். இப்படத்தில் விஜயுடன் ரீமா சென், வடிவேலு, ஜெய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று வசூல் சாதனை படைத்தது. நடிகர் ஜெய் இப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜயின் ‘கில்லி’ திரைப்படம் ரீ- ரிலீஸாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், வருகிற ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பகவதி’ திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...