
தமிழகம்
பள்ளி மாணவி மர்ம மரணம் – மெரினாவில் போராட்டம் நடத்துவதாக தகவல்!!
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டமானது வன்முறையாக மாறியது.
இந்த சூழலில் மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை ஆய்வுசெய்ய வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடைப்பெறுவதாக தகவல்கள் வெளியாகியது.
இதனால் தற்போது மெரினா கடற்கரையில் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 4 தனிப்படை அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
