லஞ்சம் வாங்கியதாக புகார்! பெண் அதிகாரி கைது!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தனக்கு 2 பெண்குழந்தைகள் உள்ள காரணத்தினால் நிதியுதவி வேண்டும் என்ற ஒரு மனுவை சமர்பித்துள்ளார்.

இதற்கு பசும்பொன் தேவி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூகுள் பே மூலம் முன்கூட்டியே ரூ.1500 ரூபாய் செலுத்தியுள்ளார். பின்னர் மீதமுள்ள ரூ.1500 ரூபாய் கையில் ரொக்கமாக தருவதாக தெரிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் வழக்கு! மயங்கி விழுந்த சுவாதி… நீதிமன்றத்தில் பரபரப்பு!!

இந்த சூழலில் லஞ்ச ஒழிப்புதுறையினருக்கு செந்தில் குமார் தகவல் கொடுத்த நிலையில், பேருந்து நிலையத்தில் வைத்து பசும்பொன் தேவியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து பசும்பொன் தேவியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.