ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை: நாளை காலை தாக்கல்!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் பேரில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலா உட்பட பல்வேறு தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்திருந்தது.

இதனையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை நீதியரசர் ஆறுமுகசாமி நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக நாளை காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.