5வது முறையாக உயர்ந்தது ரெப்போ வட்டி விகிதம்.. யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
2022 ஆம் ஆண்டில் ஏற்கனவே நான்கு முறை ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கியை உயர்த்திய நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி கூடியது என்பதும் இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி வட்டி விகிதம் 0.35% உயர்த்துவதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இதுவரை 5.9 என இருந்த ரெப்போ வட்டி விகிதம் இனி 6.25 என உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்களின் பாடு திண்டாட்டம் என்றும் அவர்களது இஎம்ஐ தவணை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நான்கு முறை வட்டி விகிதம் உயர்ந்ததால் இஎம்ஐ அடுத்தடுத்து உயர்ந்த நிலையில் தற்போது மேலும் உயர உள்ளது லோன் வாங்கியவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்து உள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்ந்துள்ளதால் மீண்டும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.